Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12.06.2025) | 11PM Headlines | ThanthiTV
ஏர் இந்தியா விமான விபத்து - நாட்டை உலுக்கிய சம்பவம்
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்து ஒருவர் உயிருடன் மீட்பு... Emergency Exit வழியாக விமானத்தில் இருந்து குதித்து தப்பியதாக தகவல்
பறக்கத் துவங்கிய சிறிது நேரத்திலேயே விபத்திற்குள்ளான விமானம்... விமானம் விபத்திற்குள்ளாகும்போது பதிவான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு...
விபத்தில் சிக்கிய விமானத்தில் 169 இந்தியர்கள் பயணம்... அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த நிலையில் நிகழ்ந்த சோகம்...
விபத்தில் சிக்கிய விமானத்தில் 53 இங்கிலாந்து நாட்டவர் பயணம்... 7 போர்ச்சுக்கீசியர், ஒரு கனடா நாட்டவர் பயணித்ததாகவும் அறிவிப்பு...
விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் 8 பேர் சிறார்கள்... 2 கைக்குழந்தைகள் இருந்ததாகவும் தகவல்...
அகமதாபாத் சிவில் மருத்துவமனை முன் குவிந்து வரும் பயணிகளின் உறவினர்கள்... மருத்துவமனைக்குள் செல்ல அனுமதிக்குமாறு கண்ணீருடன் கோரிக்கை...
ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழப்பு...லண்டனில் உள்ள மகனை சந்திப்பதற்காக பயணித்தபோது நிகழ்ந்த துயரம்...
ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழும சேர்மன் சந்திரசேகரன் அறிவிப்பு...மருத்துவக் கல்லூரி விடுதியில் காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவையும் டாடா குழுமம் ஏற்கும் என உறுதி...
அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண உறவினர்களின் டிஎன்ஏ-வை சேகரிக்க ஏற்பாடு...குஜராத் சுகாதார முதன்மை செயலாளர் ஸ்ரீ தனஞ்சய் திவேதி தகவல்...
