காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (15.08.2025) | 10 AM Headlines | ThanthiTV

x
  • 79வது சுதந்திர தினம், நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்.....டெல்லி செங்கோட்டையில் 12வது முறையாக தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி....
  • காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கோ....
  • தூய்மை பணியாளர்கள் பிரச்சினையில் திமுக அரசு கருணையோடு நடந்து கொள்ளவில்லை என்றால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவீர்களா?....திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேள்வி
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா
  • தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், தேசியக் கொடி ஏற்றி மாவட்ட ஆட்சியர்கள் மரியாதை....
  • 79வது சுதந்திர தினத்தையொட்டி, கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்...
  • இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது...10 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் கவுரவிப்பு
  • விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 22 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்...தியாகிகள் குடும்பம் ஓய்வூதியம்12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...
  • மத்திய அரசிடம் போராடி நிதி பெறும் நிலை, ஒருமைப்பாட்டையும் மாநிலத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும்....போராடி, வாதாடி நிதி பெறுவது கூட்டாட்சிக்கு அழகல்ல என முதல்வர் ஸ்டாலின் பேச்சு...
  • அவசர நிலையை அமல்படுத்தி அரசியலமைப்பு கொன்ற பாவிகளை எந்த தலைமுறையும் மறக்க கூடாது என பிரதமர் மோடி ஆவேசம்..
  • பாகிஸ்தானின் அணுஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒரு போதும் அஞ்சாது....‘எதிரிகள் மீண்டும் முயன்றால் எங்கு, எப்போது தாக்குதல் என்பதை நமது படைகள் தீர்மானிக்கும் என பிரதமர் மோடி உறுதி...
  • தீபாவளி பண்டிகைக்கு பின் ஜிஎஸ்டி வரி முறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி உத்தரவாதம்....

Next Story

மேலும் செய்திகள்