இந்த காட்சிகள் உங்கள் இதயங்களை உடைக்கும்.. சுக்குநூறாக்கும் - உலகை உலுக்கிய துயரம்
காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் 62 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 62 பேர் கொல்லப்பட்டனர்.
காசாவில் வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தரைமட்டமான வீடியோ வெளியாகியுள்ளது.
காசா நகர்ப்புற பகுதியில் உள்ள இந்த அடுக்குமாடி கட்டிடம், இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக பாலஸ்தீனர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதனை ஹமாஸ் பயன்படுத்துவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியது. இந்நிலையில், கட்டிடம் தகர்க்கப்பட்டதால் அப்பகுதியில் அடர்ந்த புகை சூழ்ந்தது.
காசாவில் அதிகரித்து வரும் தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் காசா பகுதியில் பல இடங்களில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், 4 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 62 பேர் கொல்லப்பட்டனர். இதன்மூலம் காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 455ஆக உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து 62 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
