"அமெரிக்காவின் இருண்ட காலமான டிரம்ப் ஆட்சி.." - US அரசியலை உஷ்ணமாக்கிய பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தை இருண்ட நாட்கள் என, முன்னாள் அதிபர் ஜோ பைடன் கடுமையாக சாடியுள்ளார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் ILLINOIS மாகாணம் சிகாகோவில் நடைபெற்ற தேசிய வழக்கறிஞர் சங்க விழாவில் உரையாற்றிய ஜோ பைடன், நீதி மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். டிரம்ப் நிர்வாகத்தை குறிப்பிட்டு, இவை இருண்ட நாட்கள் என்றும், அமெரிக்கர்கள் தற்போது உணரத் தொடங்கிவிட்டதாகவும், எதிர்காலத்திற்காக அனைவரும் போராட வேண்டும் என்றும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.
Next Story
