Tatkal | Ticket Booking | தட்கல் டிக்கெட் புக்கிங்கில் முக்கிய மாற்றம்

x

இன்று முதல், ரயில் நிலைய முன்பதிவு கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் பெற OTP சரிபார்ப்பு கட்டாயம் என ரயில்வே அறிவித்துள்ளது.

தட்கல் டிக்கெட் மோசடிகள், போலி முன்பதிவுகள் மற்றும் இடைத்தரகர்களை கட்டுப்படுத்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்பதிவு படிவத்தில் பயணி குறிப்பிடும் மொபைல் எண்ணுக்கு OTP வரும் என்றும், அதை சரியாக வழங்கிய பிறகே டிக்கெட் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தட்கல் முன்பதிவில் ஆதார் கட்டாயமாக இருந்த நிலையில், ஆன்லைனில் சில பிரீமியம் ரயில்களுக்கு OTP முறையும் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. சோதனை அடிப்படையில் துவங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது முதற்கட்டமாக 52 ரயில்களில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே இயக்கும் சென்னை-கோவை, மைசூர், பெங்களூரு உள்ளிட்ட பாதைகளில் இயக்கப்படும் 24 ரயில்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்