மண்டல தலைவர் Vs மேயர் - கடும் வாக்குவாதம் - மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

x

மண்டல கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக,

தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலையில் 275 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பங்கேற்ற மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை, கடந்த ஐந்து மாதங்களாக மண்டல கூட்டம் நடைபெறவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நிதியை மண்டல அலுவலகங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் முறையிட்டார். அப்போது மேயர், மூன்று மாதத்துக்கு ஒருமுறை மண்டல கூட்டம் நடத்தப்படும் என்று கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்