Youtuber | Police | பிரபல யூடியூபர் தமிழா தமிழா பாண்டியனுக்கு அதிர்ச்சி
திரைத்துறை நடிகர், நடிகைகள் பற்றி ஆபாசமாக பேசி அவதூறு பரப்பியதாக யூடியூபர்
தமிழா தமிழா பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களை ஆபாசமாகவும், ஆதாரமில்லாமல் அவதூறாக பேசியதாக
தமிழா தமிழா பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார், புகாரில் முகாந்திரம் இருப்பதை அடுத்து 4 பிரிவுகளில் கீழ் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Next Story
