

ராசிபுரம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அரிசி ஆலையை அடித்து நொறுக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் என்ற பகுதியில் அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. சம்பவத்தன்று கஞ்சா போதையுடன் ஆலைக்கு வந்த 3 இளைஞர்கள், அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். இதில் பிளாஸ்டிக் சேர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து ஆலை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.