இளைஞர்கள் எடுத்த ஆணுறை பாக்ஸ் வீடியோ வைரல் - உடனே நடந்த மாற்றம்
காலாவதி புகார் - கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆணுறை பெட்டி அகற்றம்
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படும் ஆணுறை காலாவதியாகி இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, ஆணுறை பெட்டி அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திகிராமத்தில் செயல்படும் அரசு மருத்துவனை மருத்துவக்கல்லூரியில், காலவதியான ஆணுறைகள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்ட நிலையில், இளைஞர்கள் சிலர் அதனை வீடியோவாக பதிவு செய்து புகார் அளிக்க முயற்சித்தனர். இதனை தொடர்ந்து, மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் அவசர அவசரமாக ஆணுறை பெட்டியை அகற்றினர். ஆணுறை காலவதியானதா? இல்லையா ? என்பதை உறுதிப்படுத்தி பயன்பாட்டிற்கு வைக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
Next Story