Thoothukudi | தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்.. தடுக்க முயன்ற SI-ஐ கீழே தள்ளி விட்டதால் பரபரப்பு

தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்.. தடுக்க முயன்ற SI-ஐ கீழே தள்ளி விட்டதால் பரபரப்பு

Thoothukudi | தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்.. தடுக்க முயன்ற SI-ஐ கீழே தள்ளி விட்டதால் பரபரப்பு திருச்செந்தூர் அருகே பஜாரில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களைத் தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் கீழே தள்ளிவிடப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். ஆத்தூரைச் சேர்ந்த ராகேஷ் மற்றும் எமர்சன் ஆகிய இருவரும் பஜார் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகத் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி, இருவரையும் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த இருவரும் உதவி ஆய்வாளரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆத்தூர் போலீசார், தப்பியோடிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com