சென்னையில் விலையுயர்ந்த வாகனங்களை குறிவைத்து தூக்கும் இளைஞர் - மக்களே உஷார்
சென்னையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். அரும்பாக்கம் ஜெய்நகர் பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர், தனது வீட்டின் முன்பு நிறுத்திய இருசக்கர வாகனம் திருடுபோனது குறித்து புகார் அளித்ததன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இருசக்கர வாகனத்தை திருடிய திருவண்ணாமலையை சேர்ந்த 20 வயதாகும் ஆல்பர்ட் ரோசாரியோ என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து விலை உயர்ந்த 3 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. திருவண்ணாமலையில் இருந்து பேருந்தில் சென்னை வந்து, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை ஆல்பர்ட் ரோசாரியோ திருடி வந்ததும், திருடிய வாகனங்களை விற்க முடியாவிட்டால் நண்பர்களுக்கு இலவசமாக கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆல்பர்ட் ரோசாரியோ விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
