இளைஞர் தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்

x

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே இளைஞரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமனூரைச் சேர்ந்த புகழேந்தி, 4 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரியில் உள்ள ஒரு விடுதியில் காதலியுடன் தங்கியிருந்தபோது, விடுதி உரிமையாளர் ரகசியமாக வீடியோ எடுத்து பணம் பறித்ததாக தெரிகிறது. இதையறிந்த போலீசாரும் அவரிடம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த புகழேந்தி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், விடுதி உரிமையாளர் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, புகழேந்தியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்