கலவரத்தால் பாதிக்கப்பட்ட பள்ளியில் சிசிடிவி கேமராவை திருடிய இளைஞர்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி, கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்று கூறி, அந்த பள்ளியை பொதுமக்கள் சூறையாடினர். இதனையடுத்து பள்ளியின் பாதுகாப்புக்காக வெளி புறம் மற்றும் உள்புறத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இரவு நேரத்தில் பள்ளியின் பின்புறம் வந்த இளைஞர் ஒருவர் சிசிடிவி கேமராவை திருடிச் சென்றுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்