கண்ணாடியை உடைத்து நெஞ்சில் குத்திக்கொண்ட இளைஞர் - அதிர்ச்சி காரணம்
திருப்பத்தூரில் பேக்கரியின் ஷோகேஷ் (show case)கண்ணாடியை உடைத்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் நெஞ்சில் குத்திக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாகனத்தின் கண்ணாடி மற்றும் பேக்கரியின் கண்ணாடியை உடைத்து நெஞ்சில் குத்திக்கொண்டு மயங்கிய அந்த இளைஞரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
