செல்போன் டவர் உச்சியில் ஏறி இளைஞர் போராட்டம்
கர்நாடகா மாநிலம் விஜயபுராவில், 100 அடி உயர செல்போன் டவர் உச்சியில் ஏறி இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டார். திருமணம் செய்து வைக்க கோரி அடம்பிடித்த இளைஞரிடம், வேலைக்கு செல்லும்படி பெற்றோர் அறிவுரை கூறியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த இளைஞர், 100 அடி உயர டவர் உச்சியில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த நபரை மீட்டனர்.
Next Story
