இளைஞர் வெட்டிக்கொலை - 4 பேர் மீது குண்டர் சட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன். டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் ஆந்திராவில் ஒருவரை கொலை செய்த வழக்கில், அதற்கு பழிக்கு பழியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்கானிப்பாளர் பரிந்துரை செய்துள்ளார்.
Next Story
