ராணிப்பேட்டை: ஆள்நடமாட்டம் நிறைந்த பகுதியில் இளைஞர் படுகொலை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஆள்நடமாட்டம் நிறைந்த பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை: ஆள்நடமாட்டம் நிறைந்த பகுதியில் இளைஞர் படுகொலை
Published on

அரக்கோணம் மசூதி தெருவில் அம்பேத்கர் நகரை சேர்ந்த பிரவீன் என்பவர் நேற்றிரவு சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயம் அடைந்த பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே, அப்பகுதி வியாபாரிகள் உடனடியாக கடைகளை அடைத்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

பின்னர் பிரவீனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, கூட்டத்தை கலைக்க லேசான தடியடி நடத்தப்பட்டது.

இந்நிலையில், வழக்குபதிவு செய்த போலீசார் முன்விரோதத்தால் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். எனினும் தொடர் கதையாகி வரும் கொலை சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com