முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை...

ராஜபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்த நபர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை...
Published on
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சின்ன சுரைக்காய் பட்டியைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் நான்கு மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கருப்பசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி, கோயில் திருவிழாவை பயன்படுத்தி சங்கரை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று இரவு திருவிழாவுக்காக பொதுமக்கள் பால்குடம் எடுத்த நிலையில் அங்கு வந்த கருப்பசாமி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சங்கரை சரமாரியாக வெட்டினார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காவல்நிலையத்தில் சென்று கருப்பசாமி சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com