ரேஷன் கடையில் மனைவி கண்முன்னே தலையை அறுத்து கொலை

x

தென்காசி அருகே பட்டப்பகலில் ரேஷன் கடையில் வைத்து, மனைவியின் கண்முன்னரே இளைஞர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடைக்கு தனது மனைவியுடன் சென்ற குத்தாலிங்கம் என்கிற இளைஞரை, அங்கு வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்தது. மேலும் தலையை துண்டித்து அவரது சொந்த ஊரான காசிமேஜர்புரத்தில் வீசியுள்ளனர். பட்டுராஜ் என்பவரின் கொலைக்கு பழிக்குபழியாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்