மின்கம்பத்தை தொட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி படுகாயம்

x

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்தார். சுரேஷ் என்பவர் மளிகை பொருட்கள் வாங்கச் சென்றபோது, மின்சாரம் செல்லும் இரும்புக் கம்பத்தை பிடித்து பள்ளத்தில் இறங்க முயன்ற நிலையில், மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்தார். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவத்திற்கு மின்சாரத்துறையின் அலட்சியமே காரணம் என கூறி, கிராம மக்கள் மின்சார அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்