பெட்ரோல் கேனுடன் செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

x

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே செல்போன் டவர் மீது பெட்ரோல் கேனுடன் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பான விசாரணையின்போது, போலீசார் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி போலீசாரை கண்டித்து அவர் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஈ.சி.ஆர். சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்