இளைஞர் கொலை அடித்துக் கொ*ல - பொள்ளாச்சி காப்பக விவகாரத்தில் பகீர் திருப்பம்
பொள்ளாச்சி மனநல காப்பகத்தில் இருந்து மாயமானதாக கூறப்பட்ட இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் வருண்காந்தை சுற்றுலா அழைத்துச் சென்றபோது மாயமானதாக கூறப்பட்ட வழக்கில், தனியார் காப்பக நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
வருண்காந்த் உடலில் காயங்களுடன் ஒரு வீடியோ வெளியான நிலையில், காப்பக நிர்வாகி கவிதா லட்சுமணன், ஷாஜி, கிரிராம், சதீஷ் மற்றும் ஊழியர் சீலா ஆகியோர் மீது வருண்காந்தின் தந்தை புகார் அளித்துள்ளார். காப்பக ஊழியர்கள் தாக்கியதில் வருண்காந்த் கொல்லப்பட்டு, நடுப்புணி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் பரவிய நிலையில், அந்த தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த உடலை தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மீட்கப்பட்ட சடலம் வருண்காந்துடையது தான் என்றும், அவர் அடித்துக் கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை தனியார் காப்பகத்தினர் சுற்றுலா அழைத்துச்செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தனிப்படை அமைத்து இந்த வழக்கை தீவிரப்படுத்திய நிலையில், காப்பக நிர்வாகி கிரி ராம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
