ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் திருக்கை பகுதியை சேர்ந்த மைக்கேல் டிசோஸ் 11 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இறந்தவர் பெயருக்கு பட்டா வழங்குவதாகக் கூறி தாயுடன் வந்து தற்கொலைக்கு முயன்றார். தான் இறந்துவிட்டால் தனது மனைவி பெயருக்கு பட்டா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தற்கொலைக்கு முயன்றதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.. தண்ணீர் ஊற்றி அவரை சமாதானப்படுத்திய போலீசார் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.
Next Story
