கத்திப்பாரா மேம்பாலத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி
கத்திப்பாரா மேம்பாலத்தில் 35 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் இடுப்பு உடைந்து மருத்துவமனைகளில் அனுமதி
சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்து பாலாஜி கத்திப்பாரா மேம்பாலத்தில் விமான நிலையம் நோக்கி செல்லும் பாதையில் நடந்து சென்றார். பின்ன்ர் சுமார் 35 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார். கத்திப்பாராவில் கிண்டி செல்லும் சர்விஸ் சாலையில் விழுந்தார். உடனே அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள், பொது மக்கள் ஒடி வந்தனர். பரங்கிமலை போலீசாருக்கு தகவல் தந்தனர். ப்ரங்கிமலை போலீசார் விரைந்து வந்து இடுப்பு உடைந்து படுகாயத்துடன் இருந்த பாலாஜியை மீட்டு கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். காதல் பிரச்சனையா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
