பைக் விற்கும்போது இத மட்டும் பண்ணாதீங்க..புதுசு புதுசா கிளம்புறாங்க..

காங்கயத்தில் டெஸ்ட் டிரைவ் என்ற பெயரில், பைக்கை திருடிச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த குமரேஷ் தனது பைக்கை விற்பனை செய்ய சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். பைக்கை வாங்கி கொள்வதாக தொலைபேசியில் தொடர்புகொண்ட இளைஞர், காங்கேயம் பேருந்து நிலையத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர் Test drive செய்வதாக கூறி பைக்குடன் இளைஞர் தப்பி சென்றுவிட்டார். இதனையடுத்து குமரேஷ் அளித்த புகாரின் பேரில், காங்கேயம் போலிசார் கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவா என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 4 விலை உயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com