மது போதையில் வாகனங்களுக்கு `தீ' வைத்த இளைஞர் கைது

x

மதுரை, வில்லாபுரத்தில் மது போதையில் வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கறிக்கடையில் வேலை செய்து வரும் மணி என்பவர் வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள கார், பைக், ஆட்டோ, சரக்கு வாகனங்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் மணி கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்