கோவில் திருவிழாவில் குதிரையை தீ மிதிக்க வைத்த இளைஞர் கைது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோவில் திருவிழாவில் குதிரையை தீ மிதிக்க வைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். நாமகிரிப்பேட்டையில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில், குதிரையை தீ மிதிக்க வைத்த வீடியோ வெளியானது. இதைத் தொடர்ந்து, குமரவேல் என்பவர் மீது விலங்குகள் வதைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
