

குத்தாலம் அடுத்த கொழையூர் கிராமத்தை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் பிரவின்ராஜ். இவர், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும், திருமண ஆசை கூறி அவருடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, வசதிகுறைவு காரணமாக அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள பிரவீன்ராஜ் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டார். அப்போது, காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள பிரவீன்ராஜ் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.