நாயை கொடூரமாக அரிவாளால் வெட்டிய இளைஞர் கைது

x

மதுரை வெள்ளக்கல் முனியாண்டி கோயில் பாதுகாப்பிற்காக வளர்க்கப்பட்டு வரும் நாயை கொடூரமாக அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.கோவில் பூசாரியான செல்வம் என்பவர் வளர்த்து வரும் நாய், தன்னை கண்டு குறைத்தால் முத்துராஜ் என்பவர் அதனை கல்லால் அடிப்பது, துரத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தொடர்ந்து கடந்த 19ம் தேதி கோயிலுக்கு வந்த முத்துராஜ் நாயின் வாய், கால் பகுதிகளில் வெட்டிவிட்டு பூசாரியையும் மிரட்டிய நிலையில் காயமடைந்த நாய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்