ஆளுநர் மாளிகைக்கு பாட்டிலில் பெட்ரோல் கொண்டு வந்த இளைஞர் கைது
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு பாட்டிலில் பெட்ரோலுடன் வந்து தீக்குளிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிம் போலீசார் நடத்தியதில், விருதுநகரை சேர்ந்த சின்னராஜ், என்பதும், தனது நிலத்தின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க கோரி முறையிட வந்ததும் தெரியவந்தது.மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சின்னராஜை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி அவரை ஜுலை 4ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில், அந்த நபர் நீதிபதிக்கு சாபம் விட்டதால் பெரும் பரப்ரப்பு ஏற்பட்டது.
Next Story
