Magic Mushroom | உயிரை கொல்லும் காளானை ஜாம்,தேன் ஊற்றி சாப்பிட்ட இளைஞர்கள்-பரபரப்பை கிளப்பிய ரீல்ஸ்
Magic Mushroom எனப்படும் போதை காளான்களை பயன்படுத்தும் விதங்களை இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், ஜாம் மற்றும் தேன் கலந்து எடுத்துக்கொள்ளும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன. முற்றிலும் உடல்நலனுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய இந்த போதை காளான்களை உட்கொள்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் போல நடந்து கொண்ட சம்பவமும் நடைபெற்று வந்தது. இதனிடையே, அவ்வப்போது சில உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. தற்போது, போதை காளான் விற்பனை அதிகரித்து வரும் சூழலில், கொடைக்கானல் பகுதியில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
