மதுரையில் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி சென்ற இளைஞரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோசாகுளம் பகுதியை சேர்ந்த சங்கரபாண்டி குடிபோதையில் காரை ஓட்டி சென்றுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த கார் கிருஷ்ணாபுரம் காலனி பிரதான சாலையோர இருந்த பழக்கடையை இடித்து தள்ளிவிட்டு அருகே உள்ள டெலிபோன் கம்பத்தின் மீது மோதி நின்றது. இதில் பழக்கடை நடத்தி வந்த பெண் படுகாயமடைந்தார். காரில் இருந்த சங்கரபாண்டியை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், அவரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்