கடையில் ரூ.2,000 கள்ள நோட்டு மாற்றிய இளைஞர் : ஓடியவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த உரிமையாளர்

இனிப்புக்கடை ஒன்றில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கடையில் ரூ.2,000 கள்ள நோட்டு மாற்றிய இளைஞர் : ஓடியவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த உரிமையாளர்
Published on
இனிப்புக்கடை ஒன்றில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை அயனாவரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏழுமலை என்ற அந்த இளைஞர் 2 ரூபாய் நோட்டை கொடுத்து இனிப்பு வாங்கிய நிலையில் மீதித் தொகையை பெற்றுக் கொண்டு வேகமாக ஓடியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் அருணகிரி, அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பார்த்த போது, அது கள்ளநோட்டு என தெரியவந்தது. பின்னர் அவரை விரட்டிப் பிடித்த அருணகிரி, காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் ஏழுமலையிடம் இருந்த மேலும் 6 இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர். இதனிடையே அவருக்கு கள்ளநோட்டை கொடுத்த சதீஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com