கஞ்சா போதை கும்பலால் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட கல்லூரி மாணவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. கல்லூரி மாணவரான ஜீவித் தன் காதலியுடன் திருச்சி கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அங்கு கஞ்சா போதையில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜீவித்தின் காதலியிடம் அத்துமீறியுள்ளது. இந்த மோதலில் ஜீவித் கொள்ளிடம் ஆற்றின் ஆழமான பகுதியில் தூக்கி வீசப்பட்டார். தப்பி ஓடிய அவரின் காதலி கொடுத்த தகவலின் அடிப்படையில் தொடர்ந்து தீயணைப்பு படையினர் 2 ரப்பர் படகுகள் மூலம் ஜீவித்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.