முதுகு தண்டு செயலிழப்பால் இளைஞர் அவதி : கருணை கொலை செய்யக் கோரி பெற்றோர் தர்ணா

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில், முதுகு தண்டு செயலிழப்பால், அவதிப்படும் மகனை கருணை கொலை செய்யக் கோரி தனியார் தொழிற்சாலை முன் பெற்றோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
முதுகு தண்டு செயலிழப்பால் இளைஞர் அவதி : கருணை கொலை செய்யக் கோரி பெற்றோர் தர்ணா
Published on
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில், முதுகு தண்டு செயலிழப்பால், அவதிப்படும் மகனை கருணை கொலை செய்யக் கோரி தனியார் தொழிற்சாலை முன் பெற்றோர் தர்ணாவில் ஈடுபட்டனர். 5 ஆண்டுகளுக்கு முன், அந்த தொழிற்சாலையில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில், படுகாயம் அடைந்த மகன் விக்னேஷின் மருத்துவ செலவை ஏற்பதாக உறுதி அளித்த ஆலை நிர்வாகம், தற்போது அலைக்கழிப்பதாக அவர்கள் கண்ணீர் மல்க குற்றம் சாட்டினர். 24 வயது மகனுக்காக பெற்றோர் நடத்தி பாசப் போராட்டம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.
X

Thanthi TV
www.thanthitv.com