

சென்னையில், பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் முரளி என்பவர் டீக்கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்மநபர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டார். இதில் சம்பவ இடத்திலேயே முரளி உயிரிழந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த முரளி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேறொரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த சூழலில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளதால், ஆணவக் கொலையா இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கி உள்ள கண்ணகி போலீசார், தப்பியோடிய கொலையாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.