சென்னை கூவம் ஆற்று பாலத்தின் மீது ஏறி செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த சதீஷ் என்பவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கொளத்தூரை சேர்ந்த சதீஷ் இருசக்கர வாகனத்தில் திரு வி க பாலம் வழியாக பட்டினபாக்கம் சென்றுள்ளார். அப்போது கூவம் ஆற்று பாலத்தின்
மீது ஏறி அவர் செல்பி எடுக்க முயன்ற போது விலை உயர்ந்த ஐ போன் நழுவி ஆற்றில் விழுந்தது. அதை பிடிக்க முயன்ற போது சதீஷூம் ஆற்றில் தவறி விழுந்தார். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக விரைந்து ஏணி மூலம் சதீஷை காப்பாற்றினர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.