காவலா​ளி​யை கொலை செய்ய முயன்ற சம்பவம் - இளைஞர் கைது

திருச்சியில் செல்போன் மற்றும் பணத்துக்காக காவலாளியை, கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
காவலா​ளி​யை கொலை செய்ய முயன்ற சம்பவம் - இளைஞர் கைது
Published on
திருச்சியில் செல்போன் மற்றும் பணத்துக்காக காவலாளியை, கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். செந்தில்குமார் என்ற அந்த காவலாளி, கடந்த 3ஆம் தேதி பணியில் இருந்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்திய போலீசார், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர். சேலம் மற்றும் கரூர் கொலை சம்பவங்களிலும், ராஜேஷ்குமாருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com