Chennai || இளம் பெண்கள் போதையில் அட்ராசிட்டி - போலீசாரிடம் ஆபாசப் பேச்சு

இளம் பெண்கள் போதையில் அட்ராசிட்டி - போலீசாரிடம் ஆபாசப் பேச்சு

இளம் பெண்கள் போதையில் அட்ராசிட்டி - போலீசாரிடம் ஆபாசப் பேச்சு சென்னை புழல் அடுத்த காவங்கரை பகுதியில் இருசக்கர வாகன விபத்து காரணமாக, போதையில் இருந்த இரண்டு இளம்பெண்கள் சாலையில் கடும் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனம் மோதியது தொடர்பான தகராறில், ஓட்டேரியைச் சேர்ந்த 17 வயது சிறுமி மற்றும் அயப்பாக்கத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஆகிய இருவரும், பொதுமக்களை மறித்து ஆபாச வார்த்தைகளால் தகாத முறையில் பேசியுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த வந்த போக்குவரத்துக் காவலரையும் அவர்கள் தரக்குறைவாகப் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் சிறுமி, இளம்பெண் மற்றும் உடன் வந்த இளைஞர் என மூவரையும் புழல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

#Chennai #Puzhal #Kavangarai #ChennaiNews #RoadRage #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com