சாலை விபத்தில் பலியான இளம்பெண் - காதலனை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டம்

x

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து இளம்பெண் உயிரிழந்த நிலையில், காதலனை கைது செய்ய கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்களால் பரபரப்பு எற்பட்டது. செம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் திலகவதி மற்றும் சத்யகீதன். இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆம் தேதி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த திலகவதி மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில், இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், காதலனை கைது செய்ய கோரி உறவினர்கள் திருப்போரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்