6 மாத கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
வேதாரண்யம் அருகே இளம்பெண், 6 மாத கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கூட்டுறவு சங்க ஊழியர் சிவபாலனின் மனைவி காவியா...
சிவபாலனின் பெற்றோருக்கும், காவியாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து காவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு காவியா தனது ஆறு மாத குழந்தையுடன் அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியோடு கிணற்றில் இருந்து காவியா மற்றும் அவரது குழந்தையின் உடலை மீட்டனர்.
மேலும், காவியாவின் மாமியார் செந்தமிழ்ச்செல்வியை கைது செய்த போலீசார்,
தலைமறைவான மாமனார் பழனிதுரையை தீவிரமாக தேடி வருகின்றனர்.
