கழிவறையில் பிரசவித்த இளம் பெண் - பிறந்த குழந்தை உயிரிழப்பு

x

ஈரோடு மாவட்டம் அருகே கழிவறையில் இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்து உயிரிழந்த விவகாரத்தில் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னிமலை பகுதியில் இயங்கி வரும் தனியார் விடுதியில், இளம்பெண் ஒருவர் தங்கியிருந்தார். அங்கிருப்பவர்களிடம் தான் கர்ப்பிணியாக இருந்ததை மறைந்ததாக கூறப்படுகிறது. சம்பவ தினத்தன்று, விடுதியில் வசிக்கும் பெண்கள் பணிக்கு செல்ல தாயரான நிலையில், கழிவறையை திறந்துள்ளனர். உள்ளே இளம்பெண் பிரசவித்து இருப்பதையும், தண்ணீர் நிறைந்த பக்கெட்டிற்குள் பிறந்த குழந்தை இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், இளம்பெண்ணிடம் சுகாதார துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்