இளம்பெண் கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை

x

இளம்பெண் கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை

தென்காசி மாவட்டம் அருகே, இளம்பெண் கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புளியங்குடி மணக்கடையார் கோயில் அருகே, இளம்பெண் ஒருவர் கைகுழந்தையுடன் சடலமாக மிதந்த நிலையில், காவல்நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட இளம்பெண், அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி வெண்ணிலா என்பதும், உயிரிழந்த குழந்தையின் பெயர் முகில் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்