திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
செங்கல்பட்டு அருகே திருமணமாகாத விரக்தியில் பிறந்தநாள் அன்று இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்கப்பெருமாள் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மூத்தமகன் மற்றும் மகளுக்கு திருமணம் ஆன நிலையில், இளையமகள் தீபிகாவுக்கு கடந்த 7 வருடங்களாக மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். தீபகாவின் 28 வயது பிறந்தநாளை கொண்டாட பெற்றோர்கள் அவரை கோவிலுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் குளிக்க சென்ற தீபிகா நீண்ட நேரம் ஆகியும் வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றனர் . அப்போது, குளியலறையில் உள்ள ஷவரில் தீபிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது
Next Story
