கணவர் தாக்கியதால் இளம்பெண் தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்

கணவர் தாக்கியதால் இளம்பெண் தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்
Summary

கணவர் தாக்கியதால் இளம்பெண் தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்

திருவள்ளூரில் பிரிந்து சென்ற மனைவியிடம் குழந்தையை கேட்டு கணவர் தகராறு செய்த நிலையில், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருவள்ளூர் ஜவகர் நகரைச் சேர்ந்த சுனில் குமார் - லாவண்யா தம்பதிக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 10 மாத குழந்தை உள்ளது.

கணவரின் தகாத உறவு மற்றும் வரதட்சணை கொடுமையால் தாய் வீட்டிற்கு வந்த லாவண்யாவிடம், சுனில் குமார் குழந்தையை கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதில் லாவண்யாவை அவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லாவண்யா, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனை அடுத்து, சுனிலை கைது செய்யக்கோரி, திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அருகே லாவண்யாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது தாய் இறந்ததை அறியாமல் லாவண்யாவின் கைக்குழந்தையும் அவர்களோடு அமர்ந்திருந்தது சோகத்தை ஏற்படுத்தியது...

X

Thanthi TV
www.thanthitv.com