காதலனை கரம்பிடித்த இளம்பெண் - 2 மாதத்தில் உடலை விட்டு பிரிந்த உயிர்

x

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே திருமணமான 2 மாதங்களில் மணப்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேம் குமார், ரூபினி ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திருமணமான 2 மாதத்தில் ரூபினி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக, அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்