இன்ஸ்டாவில் கிடைத்த தோழியை நம்பி மோசம்போன தோழன் இளைஞர்களே இப்படியும் நடக்கலாம் உஷார்.
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7 லட்சம் மோசடி
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை ஆன்லைன் சாட்டிங் செயலி மூலம் 7 லட்சம் ரூபாய் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் நந்தகோபால். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், இன்ஸ்டாவில் தன்னுடன் பழகிய பெண்ணை நம்பி, ஆன்லைனில் 6 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். லாப தொகையை எதிர்நோக்கிய நிலையில், மேலும் பல லட்சங்கள் கட்டும்படி அப்பெண் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நந்த கோபால், சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை செய்த போலீசார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சீத்தாராமன், மற்றும் செந்தில்நாதனை கைது செய்துள்ளனர். மேலும் இருவரை வடக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
