திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை சென்னையில் கடத்தி மதுரைக்கு கொண்டு சென்ற இளைஞர்கள்

x

சென்னை ஓட்டேரியில், திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓட்டேரியை சேர்ந்த இளம் பெண்ணுக்கு வரும் 29ஆம் தேதி திருமணமாக உள்ள நிலையில், காரில் வந்த இருவர் அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக பெண்ணின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கார் ஓட்டுநர் அர்பத் ரஹீம் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த பெண்ணை நைனா முகமது என்பவர் மதுரைக்கு கடத்திச்சென்றதாக கூறியுள்ளார். மதுரை போலீசாரின் உதவியுடன் பெண்ணை கண்டறிந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

நட்பாக பேசியதை தவறாக புரிந்துகொண்ட நைனா முகமது தன்னை கடத்திச் சென்றதாக அந்த பெண் கூறியதை அடுத்து, அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்