TN Police | Ulundurpet | Dating App.. நம்பி சென்ற இளைஞர்.. கொடூரம் செய்த இருவர்.. பகீர் பின்னணி..!

நம்பி சென்ற இளைஞர்.. கொடூரம் செய்த இருவர்.. பகீர் பின்னணி..!

TN Police | Ulundurpet | Dating App.. நம்பி சென்ற இளைஞர்.. கொடூரம் செய்த இருவர்.. பகீர் பின்னணி..!

#DatingApp #Ulundurpet #TNPolice #Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, Grindr ஆப் மூலம் இளைஞரை தனிமையான இடத்திற்கு வரவழைத்து பணம் பறித்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் பம்பாதிரிப்பேட்டையைச் சேர்ந்த 30 வயது பச்சமுத்துவை, மர்ம நபர்கள் உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே வரவழைத்துள்ளனர். பின்னர் மதியனூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை கத்தியால் குத்தி, 4 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. காயமடைந்த பச்சமுத்துவை அப்பகுதி மக்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த போலீசார், அவரது செல்போனை கைப்பற்றி அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com