பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர் - திருமணம் செய்ய சம்மதமா? சிறை செல்ல சம்மதமா? - நீதிபதி

பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர் - திருமணம் செய்ய சம்மதமா? சிறை செல்ல சம்மதமா? - நீதிபதி
பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர் - திருமணம் செய்ய சம்மதமா? சிறை செல்ல சம்மதமா? - நீதிபதி
Published on

பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர் - திருமணம் செய்ய சம்மதமா? சிறை செல்ல சம்மதமா? - நீதிபதி

புதுக்கோட்டையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில், காதல் ஜோடிகளுக்கு, நீதிமன்ற உத்தரவுபடி நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றது.வடக்கு பட்டியை சேர்ந்த கஸ்தூரி என்பவரை அவரது தூரத்து உறவினர் ராம்கி என்பவர் காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு, பின்னர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதுகுறித்து கஸ்தூரி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ராம்கி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு இன்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,கஸ்தூரியை திருமணம் செய்துக்கொள்ள சம்மதமா? இல்லை என்றால் சிறைக்கு போக நேரிடும் என, நீதிபதி அப்துல் காதர் எச்சரித்தார். இதையடுத்து, கஸ்தூரியை திருமணம் செய்ய ராம்கி சம்மதித்தார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோவிலிலேயே, இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com